தேசிய மக்கள் சக்தியில் ஈஸ்டர் தாக்குதல் குற்றவாளி.. ஆளும் தரப்பின் விளக்கம்!

தேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியலில் இருந்த மொஹமட் இப்ராஹிம் ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய குற்றவாளி அல்ல என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மொஹமட் இப்ராஹிமின் இரண்டு மகன்கள் மீது ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் குற்றச்சாட்டு இருந்தாலும் அவர் ஒரு குற்றவாளி அல்ல என அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனாலேயே அரசாங்கம் அவர் மீது எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், குற்றவாளி ஆளும் தரப்பில் இருந்தாலும் அவர் மீது நடவடிக்கை எடுக்க அரசாங்கம் தயங்காது என அவர் கூறியுள்ளார்.