நாட்டு மக்கள் வளமாக இருப்பதைத் தாண்டி அரசாங்கத்தின் 159 பேரும் மிக வளமாக இருப்பதை அண்மைய தினங்களில் காணக்கூடியதாக உள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
70 வருட கால சாபத்தினுள் கோடீஸ்வரர்களாக மாறியது எப்படி எனவும் நாமல் கேள்வியெழுப்பியுள்ளார்.
இன்று நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில் கருத்து தெரிவிக்கும் போதே நாமல் ராஜபக்ச இதனைத் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், 76 வருடங்களில் கோடீஸ்வரர் ஆகவில்லை என்றால் கடந்த சில வருடங்களில் கோடீஸ்வரர்களாக மாறியது எப்படி? அந்த கேள்விக்கும் ஒவ்வொருவர் ஒவ்வொரு பதில்களை வழங்கியிருந்ததை காணக்கூடியதாக இருந்தது.
கடற்றொழில், இறப்பர் தொழில் வீழ்ச்சியடைந்துள்ளது. மின்சார சபை ஊழியர்களுக்கு ஏமாற்றமடைந்ததே பெரிய ஒரு வருத்தமாக உள்ளது.
பயமுறுத்தி அரசியலில் ஈடுபட்ட காலம் தற்போது முடிவடைந்து விட்டது” என தெரிவித்துள்ளார்.